Advertising
Featured Post

யாழ். நகரில் இருந்து காங்கேசன்துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ். வீதி) விஸ்தரிப்புத் தொடர்பாக சகல தரப்பு களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், தமது அலுவலகத் தில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இப் படிக் கூறினார்.
இக்கூட்டத்தில் இந்து மாமன்றத்தின் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன்,முருகன், மன்றத்தின் யாழ். பிராந்திய பணி மனை நிர்வாக அலுவலர் வி.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முக லிங்கன், விரிவுரையாளர் பொ. அகிலன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
கே.கே.எஸ். வீதியை விஸ்தரிக்கும் தற் போதைய திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து கூட்டத்தில் பங்கு பற் றியவர்கள் ஆளுநருக்கு விளக்கிக் கூறி னார்கள்.இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதி கார சபையினரையும், வேலை ஒப்பந்தகார ரையும் கல்லூரி அதிபர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து எதிர்வரும் 10 ஆம் திகதி கூட்டம் ஒன்றை நடத்துவ தற்கு தாம் முடிவு செய்துள்ளதாகவும் அந்தக் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவு ஒன்று எட்டப்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

(நன்றி- புதினப்பலகை-நந்தன் அரியரத்தினம் )

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், குறிப்பாக சிறிலங்காவினாலும் அதன் நேச நாடுகளினாலும் புலிகளின் தலைமை வீழ்த்தப்பட்ட பின்புலத்தில், நமது அரசியல் அரங்கில் தோன்றியிருக்கும் முதன்மையான கேள்வி தமிழ் மக்களுக்கான அடுத்த தலைமை எது என்பதுதான்.

இந்த கேள்வி மிகவும் சிக்கலானதும் உணர்ச்சிவயமானதும் கூட.

ஏன் இது உணர்ச்சிவயமாக இருக்கிறதென்றால் கடந்த 30 வருடங்களாக இதுதான் நமது தலைமை என்று குறிப்பிடப்பட்ட ஒன்றிலிருந்து சடுதியாக எவ்வாறு விலகுவது என்ற கேள்வியில்தான் அதன் உணர்ச்சிமயமான தன்மை தங்கியிருக்கிறது.

இது மிகவும் சிக்கலானதுதான்; ஆனாலும் சூழலைக் கருத்தில் கொண்டு நமது உணர்ச்சிவயமான எண்ணங்களிலிருந்து விடுபட்டு சிந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அவ்வாறு சிந்திக்க மறுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் மேலும் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தம்.

விடுதலைப் புலிகளின் தோல்வி, நமது அகநிலை அரசியலைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்களை அரங்கிற்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஒன்று, தமிழர் அரசியல் அதன் பேரம் பேசும் ஆற்றலை [Demanding Power] இழந்திருக்கிறது.

இரண்டு, சிங்களம் அதன் நிகழ்சி நிரலைத் தமிழர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் திணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது.

இதனை இன்னும் சற்று ஆழமாக நோக்குவதானால் மிதவாத அரசியலின் தோல்விக்குப் பின்னர் வளர்ச்சியடைந்த ஆயுத ரீதியான போராட்ட அரசியல் மீண்டும் மிதவாத அரசிலுக்கே திரும்பியிருக்கிறது.

இங்குள்ள சிக்கலான கூறு என்னவென்றால், ஆரம்பத்தில் மிதவாத அரசியலுக்கு இருந்த பேரம் பேசும் ஆற்றலைக் கூட இழந்த நிலையில்தான் நமது அரசியல் இயக்கம் மீண்டும் மிதவாத அரசியலை நோக்கி திரும்பியிருக்கிறது.

இது மிகவும் துரதிஸ்டவசமானதுதான்; ஆனால், இது தான் இன்றைய நிலைமை.

நமது அரசியல் தலைமைத்துவம் குறித்த சிக்கல்களை மேலும் விளங்கிக் கொள்வதாயின், இன்று புலம்பெயர் சூழலில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை நோக்கலாம்.

“வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான மீள் வாக்கெடுப்பு”, “சுதந்திர தமிழ் ஈழத்திற்கான மக்கள் வாக்கெடுப்பு” என்றவாறான சொல்லாடல்களில் நிகழ்வுகள் அங்கு நடபெற, ஈழத்தில் அது குறித்து கருத்தில் எடுப்பதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை தோன்றியிருக்கிறது.

இது எதனை நிரூபிக்கிறது என்றால் - முன்னர் புலம்பெயர் சூழலும் ஈழமும் ஒரே நேர் கோட்டில் பயணித்த நிலைமை மாறி தற்போது இரண்டும் இரு வேறு திசையில் பயணிக்கிறது என்பதையே.

தமிழ் மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கான தலைமையற்று கையறு நிலையில் இருக்கின்றனர் என்பதையே இது மேலும் வெளிப்படையாக்குகிறது.

இந்த இடத்தில்தான் தற்போது ஈழத்தில் தமிழர்களின் தலைமையாகக் கொள்ளக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனம் பெறுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுமை குறித்தும் இங்கு அவதானிப்பது அவசியம். அது இதுவரைகாலமும் தனித்துவமான ஒரு அமைப்பாக இயங்கியிருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமது எண்ணங்களை சனநாயகத் தளத்தில் பிரதிபலிப்பதற்கான ஒரு உப அமைப்பாகவே அதனை பயன்படுத்தி வந்தனர்.

கூட்டமைப்பைப் பொருத்தமட்டில் இரு வகையான அங்கத்தவர்களை அது கொண்டிருக்கிறது.

ஒரு வகையினர் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் வேறு வழியில்லாமல் விடுதலைப் புலிகளின் பலம் என்னும் நிழலில் ஒதுங்கிக் கொள்ள முயன்றோர். அதாவது விடுதலைப் புலிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த மக்களின் எண்ணப் போக்கிற்கு ஏற்றவாறான ஒரு சிறந்த மார்க்கமாக இதனை அவர்கள் கருதியிருக்கலாம்.

இரண்டாவது வகையினர், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்ற வகையில் சனநாயக அரசியல் தலைவர்களாக அறிமுகமானவர்கள். விடுதலைப் புலிகள் அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்திய வரைக்கும் இவ்வாறானவர்களே கூட்டமைப்பில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தனர். விடுதலைப் புலிகளின் பலத்தைக் கொண்டு தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டவர்களும் இவர்களே.

ஆனால் விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து மீண்டும் முன்னைய தமிழரசுக்கட்சி வகை செல்வாக்கிற்குள் தமிழர்களின் அரசியல் வந்திருக்கிறது.

கடந்த குடியரசு அதிபர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களை ஆதரிப்பதில் கூட்டமைப்பில் இடம்பெற்ற முரண்பாடுகளே இதற்குச் சான்று.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டால் - தற்போதைய சூழலில் தமிழர் கூட்டமைப்பை ஒரு கொள்கை நிலைப்பட்ட ஒரு அமைப்பாக உருமாற்ற வேண்டிய தேவையிருக்கிறது.

கொள்கை நிலைப்பட்ட அமைப்பு என்பதன் அர்த்தம், களநிலை அரசியல் யதார்த்தம் மற்றும் பிராந்திய, சர்வதேச அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதாகும்.

இனி வரப் போகும் காலத்தில் இலங்கைக்குள்ளான ஓர் அரசியல் தீர்வையே, இலங்கையில் இருந்து இயங்கும் எந்தவொரு தமிழ்த் தலைமையாலும் முன்வைக்க முடியும்.

நிச்சயமாக அது சுயாட்சி அல்லது Federal என்ற சொல்லைத் தாண்டிப் பயணிக்க முடியாது.

கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு பிறிதொரு வகையிலும் முக்கியத்துவம் உடையது.

கடந்த குடியரசு அதிபர் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பை பலவீனப்படுத்ததுவதற்காகன முயற்சிகளும் திரைமறைவில் நடைபெறுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் தலைமையுடன் தாம் பேசுவோம் என சமீபத்தில் மகிந்த தெரிவித்த கருத்தின் பின்புலத்தில் வேறு ஒரு நிகழ்ச்சிநிரல் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தற்போது தம்முடன் இருக்கும் தமிழ் அணியினருடன் [டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்தன், இன்னும் வேறு ஆட்கள்] மற்றும் கூட்டமைப்பிலிருக்கும் சிலரையும் இணைத்து [...?] புதியதொரு அணியை தேர்தலில் இறக்குவதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றலை சிதைப்பதற்கான முயற்சிகளும் பிறிதொரு பக்கத்தில் நடைபெறுகின்றன என்பதையே அந்த கருத்து சுட்டிக் காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டுமாயின் கூட்டமைப்பை கொள்கை நிலைப்பட்ட அமைப்பாக வலுப்படுத்துவதே நம் முன்னுள்ள ஒரேயொரு தெரிவு.

இன்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பலரிடம் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தவொரு தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களி்ல் பலர் - பிராந்திய பூகோள அரசியல் நகர்வுகள் குறித்துப் படித்தறிய, அதற்கு ஏற்ப தந்திரோபாய அரசியல் நகர்வுகளில் ஈடுபட ஆற்றல் அற்றவர்களாகவே தென்படுகின்றனர்.

இதற்கு விடுதலைப் புலிகளும் ஒரு காரணம். அவர்கள் எப்போதுமே திறமைசாலிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் பார்க்க தங்களால் இலகுவில் பயன்படுத்தக் கூடியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர்.

இதன் காரணமாகவே பல தகுதியற்ற நபர்கள் நமது அரசியல் அரங்கிற்கு வர நேர்ந்தது.

அரசியலுக்கான தகுதி என்பது பிறப்பாலோ, குடும்பப் பின்னணியாலோ, உணர்ச்சியூட்டும் பேச்சு வல்லமையாலோ அல்லது தலைமை மீதான பற்றாலோ தீர்மானிக்கப்படும் ஒன்றல்ல.

அறிவதற்கான பரந்த தேடலில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆராயும் ஆற்றலில், அறிவையும் ஆராய்ச்சியையும் வைத்து சிறந்த முடிவை எடுக்கும் திறனில், அந்த முடிவின் வழி செயற்படும் துணிவில் அது தங்கியிருக்கிறது.

தமிழர் கூட்டமைப்பை ஒரு கொள்கை நிலைப்பட்ட அமைப்பாக உருமாற்றும் போது இது குறித்துச் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் தலைமைப் பிரிவினருக்கு உண்டு.

எனவே தமிழர்களுக்கான அரசியல் தலைமை குறித்து சிந்திக்கும் போது முன்னைய தவறுகளை மீளவும் செய்வதாக அது அமைந்துவிடக் கூடாது.

இப்போது கட்சி பேதங்கள் முக்கியமல்ல; கொள்கையை ஏற்றுக் கொண்டு செயலாற்றும் ஆர்வம் எந்த அமைப்பைச் சேர்ந்தவரிடம் இருந்தாலும் அவர் ஆற்றல் வாய்ந்தவராயின் இணைத்துக் கொள்வது அவசியமாகும்.

இப்போது பிரச்சனை பூனை கறுப்பா, வெள்ளையா என்பதல்ல; அது எலியைப் பிடிக்குமா, இல்லையா என்பதே!

Tags:

-உதயன் ஆசிரியர் தலையங்கம் 07 பெப் 2010-
அகில இலங்கை  இந்து மாமன்றம் முக்கிய விடயம் ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியிடம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியி ருக்கின்றது. யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை அதன் உள்ளக பிரதான முக்கிய வீதிகளில் ஒன்று யாழ்ப்பாணம்  காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாண நகரத்துக்குள்ளேயே மிக ஒடுக்கமானகுறுகியவீதி இதுதான் என்று கூறுமளவுக்கு அது உள்ளது.
சுமார் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதே விசாலத்தில்தான் அது உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம்,சனப்புழக்கம், வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விரிவடைந்துவரும் பிரச் சினைகளுக்கு [...]

Tags:

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 07 பெப் 2010 -
சிங்களக் கதைகளில் மாதனமுத்தாவின் கதை பிரபலமானது. அந்தக் கதைக்குள் இருக் கக் கூடிய மூடத்தனமும், நகைச் சுவையும் சிங்கள மக்கள் என்ற எல்லைத் தாண்டி தமிழ் மக்களையும் வந்தடைந்தது.இதில் பானை பக்குவம் என்ற கதை தமிழ் மொழிப் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதும் உண்டு.
இத்தகைய கதைகள் நகைச்சுவைக்கானவை மட்டுமல்ல, அறிவின்மையைக் கூறி அறிவைக் காட்டும் உடன்பாட்டு எதிர்மறை தன்மையைக் கொண்டவையும் ஆகும்.எதுவாயினும் தென்பகுதியில் ‘பானை பக் குவம்’ என்ற கதை [...]

Tags:

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 5 பெப் 2010 -
ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். யாழ்ப்பாண மக்கள் தங்களின் சொந்த இடங்களைப் பார்ப்பதற்குக் கூட உரிமையின்றி அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் காலம் கழிக்கும் போது சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையயடுப்பது எதற்கான தென்ற கேள்வி எழுவே செய்கின்றது.
ஏதோ! நாங்கள் காட்சிப் பொருட்கள். அவர்கள் ரசிகர்கள் எங்களையும் எங்கள் வாழ்விடங்களையும் வந்து பார்த்து விட்டுச் [...]

Tags:

-வலம்புரி-
காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக பரவிய செய்தியை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
காரைநகர் மேற்கு வீதியில் வேம்படிப் பகுதியில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்தும் முயற்சி நடைபெற்றதாகவும் சிறுவர்கள் கூக் குரலிட்டதனால் அம்முயற்சிகள் தோல்விடைந்ததாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக எவரும் கிராமசேவையாளரிடமோ அல்லது வேறு எவரிடமோ முறையிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் மேற்படி சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியாத நிலையிலும் அச்சமடைந்த பெற்றோர்கள் பாடசாலைக்கு [...]

Tags:

கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபார நட வடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் அறிவித்துள்ளார்.
யாழ்.நகர சபைக்குட்பட்ட பகுதி களில் நடைபாதை வியாபார நட வடிக்கைகளை மேற்கொள்வதற் குரிய இடங்களைத் தெரிவு செய்வ தற்கான விசேட கூட்டம் நேற்று மாலை 3.30 மணியில் யாழ்.மாந கரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் [...]

Tags:

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவத் துறைப் பீடாதிபதி க. தேவராஜா பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த 30 ஆம் திகதி கூடிய பேரவை, பேராசிரியர் பதவியை அவருக்கு வழங்கியது. இதன் மூலம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் என்ற பெருமையை க.தேவராஜா அவர்கள் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் மரியாதைக்குரியவராக விளங்கும் க. தேவராஜா வணிகத்துறையின் தலைவராகவும் பீடாதிபதியாகவும் இருந்து அத்துறையின் வளர்ச்சியில் காத்திரமான பங்கை ஆற்றிவருபவர்.
சான்றாண்மை மிக்க மாணவர்களை உருவாக்கிய இவர் சமய [...]

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித பதில்களையும் இதுவரை வழங்கவில்லை. இந்தநிலையில் இன்று யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள ஒரு அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தளங்கள் இன்று காலை மூடப்பட்டிருந்ததுடன் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன.
எனினும் இதனை தடுத்து மீண்டும் இயல்பு [...]

Tags:

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தனது இராஜினாமா [...]

Tags: