Archive for the ‘தேர்தல்’ Category

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது நோக்கில் வெற்றி – வரதராஜன்

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தேர்தலில் தோல்வியுற்றாலும், தனது நோக்கத்தில் வெற்றி பெற்றிருப்பதாக, யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.வரதராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… வணக்கம் இத் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு தாங்கள் வழங்கிய பெரும் ஆதரவிற்குமிகவும் நன்றி. இத் தேர்தலில் நாம் தோல்வியடைந்த போதிலும் போட்டியிட்டதற்கான நோக்கத்தில் நாம் வெற்றியடைந் துள்ளோம். கூட்டமைப்புதூக்கியெறிய நினைத்த தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமைபோன்றவற்றை மீண்டும் அவர்கள் தூக்கிப் பிடிப்பதற்கு நாம் துணைநின்றிருக்கின்றோம் [...]

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில்

யாழ்.மாவட்ட விருப்பு வாக்குகளின்படி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 28 ஆயிரத்து 585 வாக்குக ளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.இரண்டாம் இடத்தில் 20 ஆயிரத்து 501 வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் மாவை சேனாதிராசா 2 ஆம் இடத்தில் உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய [...]

யாழ்ப்பாணத்தில் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் விபரம்!

நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் .மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவை சேனாதிராசா , சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தா,சந்திரகுமார் முருகேசு(அசோக்),சில்வெஸ்திரி அலஸ்ரின் (உதயன்)ஆகியோரும் ஐக்கியதேசியக்கட்சி சார்பில் திருமதி மகேஸ்வரன் விஜயகலா வும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு தொடர்பிலான உத்தியோக பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் [...]

உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி தமிழரசுக்கட்சிக்கு நாடாளுமன்றில் 14 ஆசனங்கள்

இதுவரை வெளியாகி உள்ள உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் படி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி முதலாவது இடத்திலும் உள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழரசு 5 ஆசனங்களும், வன்னியில் 03 ஆசனங்களும், மட்டக்களப்பில் 03 ஆசனங்களும் பெறும் என தெரியவந்துள்ளது. திருகோணமலையில் தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைக்க உள்ளது. அம்பாறை  முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. யாழ் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு 5 ஆசனமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. [...]

யாழ்ப்பாண மாவட்ட தொகுதி ரீதியிலான தோ்தல் முடிவுகள்

யாழ்ப்பாண மாவட்டம் தேர்தல் தொகுதி ரீதியிலான முடிவுகள் வெளிவந்துள்ளன இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி சகல தொகுதிகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் திகழ்கிறது. யாழ்ப்பாண மாவட்டம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி இறுதி முடிவு இலங்கை தமிழரசு கட்சி    -  4630 ஐ.ம.சு.கூட்டமைப்பு                -  2533 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -  760 ஐ.தே.மு                     -  717 இடதுசாரி விடுதலை முன்னணி    -   314 மானிப்பாய்  தேர்தல் தொகுதி இறுதி முடிவு இலங்கை தமிழரசு [...]

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களை பெற்றது-இறுதி முடிவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் 2010 இன் இறுதி முடிவுகளின்படி யாழ்பாணத்தில் தமிழரசுக்கட்சி முன்னணியில் நிற்கிறது. ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்காங்கிரஸ் உட்பட்ட மற்றையவை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன 12 தொகுதிகளில் கோப்பாய்,மானிப்பாய் வட்டுக்கோட்டை,பருத்தித்துறை,உடுப்பிட்டி சாவகச்சேரி காங்சேன்துறை ,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,கோப்பாய்,நல்லூர் ஆகியதொகுதிகளிலும் தபால் மூல வாக்களிப்பிலும் தமிழரசுக்கட்சியும் ஊர்காவற்றுறைத்தொகுதியில் ஐக்கிய மக்கள் சுந்திரக்கூட்டமைப்பும் வெற்றி பெற்றிருக்கின்றன 12 தொகுதிகளில்  யாழ் மாவட்டத்தில் வாக்களிப்பு முடிவு வருமாறு தமிழரசுக்கட்சி (வீடு)- 65119 ஐக்கிய மக்கள் சுந்திரக்கூட்டமைப்பு(வெற்றிலை)-47622 [...]

யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள்

யாழ் மாவட்டத்தில் 15 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. தற்போது வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதுடன்,  பாதுகாப்பு ஏற்பாட்டுடன் நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்படவிருப்பதாகவும் உதவித் தேர்தல் ஆணையக அலுவலகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதேவேளை, இன்று மாலை 6 மணியளவில் தபால்மூல வாக்களிப்புக்கள் எண்ணப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பதில் மக்கள் பின்னடிப்பு

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பில் சனாதிபதித்தேரதல் அளவிற்கு கூட மக்களிப்பின் வாக்களிப்பு ஆர்வம் கணப்படவில்லை. கடும் வெயில் ,அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு போன்றன மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாமைக்கு காரணங்களாக கூறப்படுகிறது.  இம்முறை குறைந்த வாக்குகளுடன் வேட்பாளர்கள் தெரிவாவார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்குரிய ஏற்பாடுகள் தடல்புடலாக பொரிய செலவில் 7 லட்சம் வாக்காளர்களை மையமாககொண்டிருந்த போதிலும் 1 லட்சம் வாக்குகள் கூட பதிவாகுமா என்பது சந்தேகமான நிலையில் உள்ளது.வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெறுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. [...]

அரச மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய களுத்துறைத் தடுப்பு முகாம் சிறையிலிருந்தேன்-த.தே. விடுதலைக் கூட்டமைப்பு வேட்பாளர்

“2001 ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசின் இராணுவ பொலீஸ் அடக்கு முறையால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களை “மனிதம்” எனும் சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்து வெளிக்கொணர்ந்த காரணத்தினால் என்மேல் கண் வைத்த அன்றைய அரசு பொய்க்காரணங்களை முன்வைத்து என்னைக் கைது செய்தார்கள். கல்கிசை, தெஹிவளை, பொலிஸ் நிலையங்களில் வைத்து விசாரணை செய்த பின் நீதிமன்றில் நிறுத்தி களுத்துறை தடுப்பு முகாம் சிறையில் ரிமாண்ட் பண்ணி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தடுத்து வைத்திருந்தார்கள். எனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று பின் [...]

தேர்தலில் தெரிவானவர்களை ஒன்றிணைக்க எமது கட்சி முழு முயற்சியெடுக்கும் த.தே.விடுதலைக் கூட்டமைப்பு வேட்பாளர் கனக. நமநாதன்

“இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதைத் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் வேட்பாளர்களை பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஒரே அணியாக இயங்கி ஒரு வேலைத்திட்டத்தில் செயற்பட எமது கட்சி தனது எல்லா உத்திகளையும் வகுத்து முழு முயற்சியெடுக்கும் என்பதை இங்கு ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றோம்” என்று 01.04.2010 அன்று மாலை வடலியடைப்பு பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு நல்லூர்த் தொகுதி வேட்பாளர் கனக. நமநாதன் கூறினார். அவர் மேலும் கூறுகையில் “இதன் காரணமாக [...]

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing