இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது. கெளரவ சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே! என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து [...]
Archive for the ‘கட்டுரைகள்’ Category
மறுப்புக்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் – இரா.துரைரட்ணத்தின் கட்டுரைக்கான ஓர் எதிர்வினை!
(வரதராஜன் B.A (Hons) நன்றி பொங்குதமிழ் இணையம்) 1.இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவுகள் என்ற தலைப்பில் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள் எழுதிய கட்டுரையின் பகுதி – 2 இல் பல தவறான தகவல்கள் – கருத்துக்கள் – முடிவுகள் தரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக அவர் தனது கட்டுரையின் தலைப்பாகப் போட்டிருந்த ‘யாழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்கவில்லை’ என்ற விடயம் தொடர்பாக அவர் கூறிய கருத்துக்களின் மறுபக்கத்தையும் பார்ப்போம். பொதுவாக தரவுகள் – தகவல்களின் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்டு [...]
கொழும்பு ஊடகத்தின் பார்வையில் யாழ்ப்பாணம்
கடந்த சில வருடங்களின் முன்னர் நாட்டினை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுத் தருமாறு கோரி தனது பிச்சைப் பாத்திரத்துடன் சிறிலங்கா மேற்கு நாடுகளிடம் கையேந்தி நின்றது. ஆனால் இன்று, நீண்ட பல வருடங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவர, பலமான அரசாங்கம் ஒன்று ஆட்சியிலிருக்கும் நிலையில் இலங்கைத் தீவில் முதலீடுகளை மேற்கொள்வற்கு முதலீட்டாளர்கள் சிறிலங்காவினைத் துரத்துகிறார்கள். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் sunday observer ஏட்டில் அதன் செய்தியாளர் Shirajiv SIRIMANE யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதிய செய்திக் கட்டுரையில் [...]
அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை!
அந்த சித்திரவதைகளை பகிர எங்களிடம் வார்த்தைகளில்லை என்று குறிப்பிடுகிறர்கள் முன்னாள் பெண் பேராளிகள். நாடாளமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது வாக்குகளை பிரதியீடாக கோருவதற்காக எப்படியும் முன்னாள் போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரை விடுவிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் விடுவிக்கப்படும் சூழல் நெருங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாமின் வாசலுக்கு சென்று சில நிமிடங்கள் அவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்கள் புன்னகைக்க விரும்புகிறார்கள். காயங்களுடனும் ஆறாத குருதிகளுடனும் புன்னகைக்கிறார்கள். நாங்கள் எதையும் பகிர விரும்பவில்லை [...]
மாற்றுத் தலைமை முன்வைக்கப்படுகின்றது ?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு கருத்து மோதல் என்பவற்றின் காரணமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களும்இ இருப்பவர்களும் மூன்று அணிகளாக பாராளுமன்றத் தேர்தலில் மோதும் நிலமை தோன்றியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிலிருந்து உருவான தமிழ்த்தேசிய விடுதலைக்கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியூள்ள தமிழ்க் காங்கிரஸ் என்பன தனித்தனியாக களமிறங்கியுள்ளன. தமிழினத்தின் தாயகமான வடகிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம்இ வன்னி ,திருமலை ,மட்டக்களப்பு ஆகிய மொத்தம் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் நேரடியாக மோதுகின்றன. அதே [...]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் ‘வடக்கு – கிழக்கு’ என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை [...]
தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்- தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம். ஊடக அறிக்கை 28-02-2010 தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது? தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் அரசியல் [...]
தமிழீழ பிரகடனம் செய்வதற்காகவா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் கோத்தபாயவை சந்தித்தனர்? : இரா.துரைரத்தினம்
அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் [...]
சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல் முன்னெடுப்புக்கள் கேவலமாகிவிட்டது.
-கனக நமநாதன்-{ namanathan@gmail.com } பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சனைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள பலருக்கு தெரியாது. [...]
தமிழ் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த த.தே.கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உருவாக்கினார்கள் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அப்படி அல்ல. த.தே.கூ;டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தேவை கருதி த.தே.கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு உள்வாங்கியிருந்தார்களே தவிர, த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால், த.தே.கூட்டமைப்பு எப்படி உருவானது? இது உண்மையிலேயே ஈழத் தமிழினம் அறிந்து வைத்திருக்கவேண்டிய ஒரு உண்மை.த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புகள், [...]

Posted in






