தமிழ் பேசும் மக்களின் விமோசனத்திற்காக வென்று வெளிப்படுத்திச் செயற்படும் தலைமைகள் கட்சிகளுக்கப்பால் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் சமூகத்திற்குள்ள அடிப்படைப் பிரச்சனைகளை அடையாளம் கண்டு கொள்ளவும் அதற்கான தீர்வை முன்வைக்கவும் தமிழ் முஸ்லீம் அபிலாசைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வுக்கான விடயங்களை ஆராய்ந்தும் ஒரு முடிவுக்கு வந்து அதனை ஒத்த குரலில் அரசாங்கத்திற்கு முன் வைக்க முன் வரவேண்டும். முடிவு ஏகமனதாக இருக்கலாம். அல்லது பெரும்பான்மை கட்சிகளின் அமையலாம். இதனால் ஒவ்வொரு தமிழ் முஸ்லீம் கட்சிகளையும் கலந்தாலோசிக்க வேண்டுமென்று [...]
Archive for the ‘கருத்துக்களம்’ Category
தமிழ் பேசும் கட்சித்தலைமைகள் ஒன்றிணைந்து பிரச்சனைகளை அரசுக்கு முன்வைக்குமா?
இரணைமடு நீர் விநியோகத்தை காவேரிப் பிரச்சினைபோல் ஆக்கிவிடாதீர்கள்
-Valampurii Editorial 30-05-2010- இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் விநியோகிக்கும் திட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி யிருந்தவேளை ,யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வும் அதனை உறுதிப்படுத்தி உரையாற்றினார். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் செய்யுங்கள் என்று யாழ்ப்பாண மக்கள் மகஜர்கள் எழுதி அரசுக்கு அனுப்பியவர்கள் அல்ல.இந்த நாட்டில் எந்தத் திட்டமும் சரிவராது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.அபிவிருத்திப் பணி ஒன்றை எதிர்ப்பதென்றால், அதற்குச் சங்கம் அமைத்துப் போராடவும் நாங்கள் தயங்கமாட்டோம் [...]
‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’: தமிழ் பாடசாலைகள் துரத்திய தமிழ் மாணவர்களுக்கு இடமளித்தது சிங்களப் பாடசாலை
வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் ‘வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்’ எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ‘நேசக்கரங்கள்’ உதவி நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் [...]
எனது முழுப்பெயர் – அகதி இலக்கம்: AM47815- 07
-காஞ்சனா வரதரூபன் (அருணாசலம் முகாம்)- நாங்கள் இன்னும் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம் ஒரு கூடாரத்திலிருந்து இன்னொரு கூடாரம் ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து இன்னொரு பாதுகாப்பு வளையம் என்று மாற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். நாங்கள் களைத்து விட்டோம் ஆனாலும் அவர்கள் விடுவதாயில்லை. அகதிகளின் வயதோ கூடிக் கொண்டேயிருக்கிறது. இளைய அகதிகள் முதுமை அடைந்து கொண்டிருக்கிறார்கள் குழி விழுந்த கண்களில் பாழடைந்த காலமும் அவர்களின் கழிந்த வாழ்வும் துயரொழுகக் கசிந்து கொண்டிருக்கிறது. களைப்படைந்த அகதிகள் தண்ணீருக்காக அலைகிறார்கள் சாப்பாட்டுக்காக [...]
புலிப்பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?
-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 21-4-2010 – விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது கற்பழிப்பு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி [...]
மன்னவனும் நீயோ! வளநாடும் உன்னதோ!
-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 17-4.2010- நல்லூர்க் கந்தனின் ஆலயச் சூழலில் இருந்த நடைபாதை வியாபார அமைவிடங்கள் நேற்று யாழ்ப்பாண மாநகர சபையால் அகற்றப்பட்டுள் ளது. நல்ல பணி எங்கு நடந்தாலும் அதனைப் பாராட்டுவது தார்மீகக் கடமை. அவ்வகையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சபாஷ்.அதேநேரம் யாழ்ப்பாணத்தில் இன்னும் பல பணிகள் அதிகாரிகள் முன் காத்திருக்கின்றன. அந்தக் கடமையை செய்வதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை. துணிவும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளினால் பணியாளர்களினால் எந்த விடயத்தையும் கனகச்சிதமாகச் செய்ய முடியும். [...]
தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமை பற்றிச் சிந்திக்க வேண்டும்
-வலம்புரி 11-04-2010 ஆசிரியர் தலையங்கம்- பிரித்தாளும் தந்திரம் இப்போது தமிழ் அரசியல் தலைமைகளிடம் வலுப்பெற்று வருகின்றது. பதவி ஆசை இதற்கான களத்தை அமைத்த தெனலாம். வென்றவர்கள்-தோற்றவர்கள்- இதற்கான விமர்சனங்கள் என அனைத்துமே உள்நோக்கம் கொண்டவை. இவை தவிர்க்கப் பட வேண்டும். தோற்றவர்களை விமர்சிப்பது நியாயமானதாக இருப்பது அவசியம். அதற்கு ஒரு எல்லையும் உண்டு. இப்போது தோற்றவர்கள் முன்பு வென்றபோது அந்த வெற்றியைக் கொண்டாடி விட்டு, தோற்ற போது நியாயம் அளப்பதென்பது நாகரிகமல்ல. இன்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். [...]
வெளிநாட்டு நிறுவனம் எம் மீது அக்கறை! ஆனால் எமக்கான அமைப்புக்கள்?!
வன்னிப் பகுதியில் காணப்படுன்ற படையினரின் நடமாட்டங்களால் போரின் போது கணவனை இழந்த குடும்பப் பெண்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு (UNHCR) சுட்டிக்காட்டியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் வன்னிக்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு மற்றும் அபிவிருந்தி மற்றும் ஒத்திசைவுக்குமான சுவிற்சலாந்தின் நிலையத்தின் பிரதிநிகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பெண்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பெரும் [...]
யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்!
- ‘பொங்கு தமிழ் இணையத்திற்காக – பாணன்’ – கலை கலாசார கட்டுக்கோப்பான யாழ்ப்பாணத்தில் அது கைநழுவத் தொடங்கிவிட்டது என்பது பழைய கதை. 1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை மீட்டாயிற்று என்று சொல்லி ஆக்கிரமித்தபோது அங்கு விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தனர். ஆனால் 1996 இல் மீள இடம்பெயர நேர்ந்தபோது யாழ்ப்பாணத்தவர் மீண்டும் யாழ் மண்ணிற்கே செல்ல முற்பட்டனர். பின்னர் பாதை திறப்பு அது இது என்று நடந்தபோது யாழ்ப்பாணம் கொஞ்சம் [...]
எங்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்களையும் தொன்மைகளையும் அழியவிட்டுப் பார்த்திருப்போமா? பேராசிரியர் இரா.சிவசந்திரன்
சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்டத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழலில் மிகவும் வேண்டப்படும் கருத்துக்களாக அமைகின்றன. தமிழர்களுக்கான வரலாறுகள் மறைக்கப்படுவதும் அடையாளங்கள் மாற்றப்படுவதும் இப்பொழுது மிகவும் சாதரணமாகத் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற சம்பவங்களாகிவிட்டன. அண்மையில் யாழ்.நூலகம் கொண்டிருந்த மிக முக்கியமான அடையாளம் சாயம் பூசி மறைக்கப்பட்டுவிட்டது. யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் கைகளில் 1613 இல் வீழ்ந்தது. அதன்பின் எமது பிரதேசத்தின் பண்பாட்டுத் தொன்மைகளாகவும் [...]

Posted in






