யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் மெய்யியல் துறை தலைவரும் பிரபல இடதுசாரியுமான பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா நேற்று காலமானார்.இறக்கும்போது அவருக்கு வயது 62. நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பு தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று காலமாகியுள்ளார். இவர் ஸ்கந்தவரோதயா பழையமாணவராவார். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்து மொஸ்கோ பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் கலாநிதிப்பட்டம் பெற்றிருந்தார்.32 வருடகாலம் கல்விப்பணியாற்றிய இவர் தமிழுக்காக பல படைப்புக்களை செய்துள்ளார்.இவரது மறைவுக்கு கல்விமான்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மரணச்சடங்குகள் யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பேராசிரியரின் மறைவுக்கு [...]
Archive for May, 2009
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா காலமானார்!
வன்னி மக்களுக்கான உதவிகளை வணிகர் கழகம் ஊடாக வழங்கத் தீர்மானம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் ஊடாக மேற்கொள்வதற்கென யாழ். வர்த்தகர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பான அவசர கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் யாழ். குடாநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டனர் இதன்போது தமது உதவிகளை வணிகர் கழகத்தின் ஊடாக மேற்கொள்வதெனவும் இதற்கு சகல வர்த்தகர்களும் தங்களாலான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் மனிதாபிமான [...]
கிணற்றில் இருந்த ஆணின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டது
வட்டுக்கோட்டை பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து இந்த சடலத்தை வட்டுக்கோட்டை பொலீஸார் மீட்டுள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர் மூளாய் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம். செல்வராசன் (வயது 46) என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பொலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இவரை கொலை [...]
கோல்ம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக் கேடய கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி சமூகத்தினரால் கல்லூரிச் சமூகத்தினரால் கல்லூரி வளர்ச்சிக்காகவும் யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்காகவும் அரும்பணியாற்றிய திரு.திருமதி டாக்டர் று.சு கோல்ம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக் கேடயத்திற்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி சுற்றுப்போட்டியில் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்றவுள்ளனர். இப்போட்டிகள் எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் என்.ஏ.விமலேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இச்சுற்றுப்பொட்டியில் முதல் 6 இடங்களைப் பெறுகின்ற அணிகள் அகில இலங்கை காடசாலைகள் கூடைப்பந்தாட்டச் [...]
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 208 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் 17 வயது பிரிவினர்களிற்கு நடத்திவரும் கிரிக்கெட் போட்டித் தொடரில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் சார்பில் த.அமிர்தன் 70 ஓட்டங்களும் ந.டினாளன் 48 ஓட்டங்களும் ஆ.நிரோஜன் 45 ஓட்டங்களும் ந.பிரியதர்சன் 45 ஓட்டங்களும் அ.அரிகரன் 20 ஓட்டங்களும் அணி சார்பாக 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் பெற்றது. [...]
திறந்த பல்கலைக்கழக அறிவித்தல்கள்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எந்திர தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கான 2009/2010 ஆம் கல்வியாண்டுக்குரிய பதிவுகள் எதிர்வரும் மே 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் பிராந்தியத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினங்களில் பதிவுக்குரிய சகல ஆவணங்களுடன் யாழ்ப்பாண பிராந்திய நிலையத்துக்கு சமூகம் தருமாறு பிராந்திய இணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழக பட்ட மேற்கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம் 2009ஃ10 கல்வியாண்டுக்கு பதிவு செய்த மாணவர்கள் அனைவரையும் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாண [...]
23,30 ஆம் திகதிகளில் பாடசாலை நடக்கும்
யாழ்.வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23,30 ஆம் திகதிகளில் விசேட பாடசாலை நாட்களாக நடைபெறுமென யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் அ.வேதநாயகம் அறிவித்துள்ளார். இரண்டாம் தவணை ஆரம்பத்தில் மேலதிகமாக விடப்பட்ட 5 விடுமுறை நாட்களுக்கு பதிலாகவே மேற்படி தினங்களில் பாடசாலைகள் நடைபெறவுள்ளது எனவும் அத்துடன் மீதமுள்ள 3 நாட்களும் 2ம் தவணைப் பரீட்சைக் காலத்தில் வரும் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்தவும் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் அ.வேதநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு
ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான பிள்ளை மைய முறையியல் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் செயலமர்வு எதிர்வரும் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை யாழ். இந்து மகளிர் கல்லூரியிலுள்ள ஆசிரிய வளநிலையத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலையின் ஆரம்பக்கல்விப் பிரிவில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இச்செயலமர்வில் பங்குபற்றுவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் செயலமர்வில் சமூகமளிக்க முடியாதெனின் தமக்கு உடன் அறியத் தருமாறும் பாடசாலை அதிபர்களை யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் அ.வேதநாயகம் கேட்டுள்ளார். இச்செயலமர்வில் பங்குபற்றும் ஆசிரியர் [...]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்து அமைப்புக்கள் முன்வரவேண்டும். நல்லை ஆதீன முதல்வர் வேண்டுகோள்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கென இந்து ஆலயங்கள் மற்றும் தனிநபர்களால் நிதி, அத்தியாவசியப் பொருட்கள் என்பன இந்து அமைப்புக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் நேற்றைய தினம் நல்லை ஆதீனத்தில் வைத்து ஆதீன சுவாமிகளிடம் வண்ணை சிறீகாமாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் முதல் கட்டமாக 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கையளிக்கப்பட்டது. இதேவேளை உயரப்புலம் உத்துங்க விநாயகர் ஆலயத்தால் 60 ஆயிரம் ரூபாயும் மருதனார்மடம் ஆஞ்சனேயர் தேவஸ்தானத்தில் 63 ஆயிரம் பெறுமதியான குழந்தைகளுக்கான பொருட்களும் கையளிக்கப்பட்டன. [...]
மட்டு. தேசிய கல்வியியற் கல்லூரிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவானோர்
மட்க்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு 2009 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கு யாழ்.மாவட்டத்திலிருந்து சமூகவிஞ்ஞானம், சங்கீதம், நடனம் ஆகிய பாடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயிற்சி நெறிகள் எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவர்களுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு தேசிய கல்வியியற்கல்லூரியின் பீடாதிபதி அறிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்டோரின் விபரங்கள் வருமாறு. சமூகவிஞ்ஞானம் எ.சோபனா (சுன்னாகம்), எம்.அமிர்தா (மானிப்பாய்), ரி.கோகுல்ராம் (கந்தர்மடம்), ரி.தாரணி (பருத்தித்துறை), ரி.கலைச்செல்வி (ஆனைக்கோட்டை), என்.விஜயரட்ணம் (பருத்தித்துறை), பி.கேமினி (யாழ்ப்பாணம்) [...]

Posted in






