Archive for August, 2009

மருத்துவ பீட விரிவுரையாளர் சிவராஜா மீது கத்திக்குத்து

யாழ். பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை விரிவுரையாளர் மருத்துவ பீட மாணவன் ஒருவரினால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில்; யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஆடிய பாதம் திருநெல்வேலியைச் சேர்ந்த வைத்திய கலாநிதி என்.சிவராஜா (வயது 70) என்பவரே காயமடைந்துள்ளார்.நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் மருத்துவ பீட மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென வந்த 3 ஆம் வருட மாணவன் ஒருவரினால் கத்தியால் குத்தப்பட்டு அவர் படுகாயமடைந்தார். குத்திக்குத்தக்கு இலக்காகி நெஞ்சிலும் வயிற்றிலும் படுகாயமடைந்த விரிவுரையாளர் [...]

ரெலிக்கொம் சிற்றிலிங் சி.டி.எம்.ஏயின் பிரதேசக் குறியீட்டு இலக்கம் மாற்றம்

சிறிலங்கா ரெலிக்கொம் சிற்றிலிங் சி.டி.எம்.ஏ இணைப்புக்களின் பிரதேசக் குறியீட்டு இலக்கங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து மாற்றமடைவதாக அந்நிறுவனத்தின் தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் தற்போது 0602xxxxxx எனத் தொடரும் சி.டி.எம்.ஏ தொலைபேசி இலக்கங்கள் எதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதியிலிருந்து 0213 xxxxxx எனத் தொடருமென குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நடைமுறை இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் விதிகளுக்கமைய இலங்கை பூராகவும் மாற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை யாழ். மாவட்டத்தில் சிற்றிலிங் சி.டி.எம்.ஏ இணைப்புக்கள் யாழ்.மாவட்டத்தில் [...]

யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட ஒரு தொகுதி பென்ரோச் பற்றிகள் ஓமந்தையில் தடுத்து வைப்பு

யாழ் குடாநாட்டிற்கு எடுத்து வரப்பட்ட பென்ரோச் பற்றிவகைகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒருவார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ – 9 பாதையூடாக யாழ். குடாநாட்டிற்கு பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் ஒரு சில பொருட்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பென்ரோச் பற்றிவகைகள் எடுத்து விநியோகிப்பதற்கு தனியார் முகவருக்கு அனுமதி வழங்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி ஒரு தொகுதி பென்ரோச் பற்றிகள் எடுத்து வரப்பட்ட போதும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்து [...]

ஏ – 9 பாதை பஸ் சேவை முன் அனுமதி கிடைக்காவிட்டாலும் பஸ்ஸில் செல்ல ஏற்பாடு

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ – 9 வீதியூடாக வெளி மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளவர்கள் பஸ்ஸிற்கான முன் அனுமதி (ரோக்கன்) கிடைக்காவிட்டாலும் யாழ். புகையிரத நிலையத்திற்கு காலை 6 மணிக்கு வருகை தந்தால் அனுமதி வழங்கப்படுமென யாழ் சிவில் நிர்வாக ஒருங்கிணைப்பு அலுவலக இணைப்பாளர் மேஜர் சமந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்திலிருந்து ஏ – 9 வீதியூடாக பஸ்களில் வெளிமாவட்டங்களுக்குச் செல்லவுள்ளவர்கள் வடபிராந்திய போக்குவரத்துச்சபையின் யாழ். மத்திய பஸ்தரிப்பிடம் மற்றும் காரைநகர், பருத்தித்துறை பஸ் டிப்போக்களில் [...]

மீசாலை ரயில் நிலைய புனரமைப்பு மத்திய மாகாண சபை பொறுப்பேற்பு

மீசாலை ரயில் நிலையத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து கொடுக்க மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் மத்திய மாகாண சபை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அம்மாகாணச் சபையின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.தனிப்பட்டவர்களினதும் தனியார் வர்த்தக நிலையங்களினதும் உதவிகளுடன் இந்த புனரமைப்பு பணிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் உரித்தான ஒரு வேலைத்திட்டப் பணியாகும். இந்த [...]

வடகடல் பிரதேசங்களில் பகலிலும் இரவிலும் மீன்பிடிக்க புதிய நிபந்தனைகள் அறிவிப்பு

வடகடல் பிரதேசத்தில் மீன்பிடித்தல் சம்மந்தமான புதிய நிபந்தனைகளை வடபிராந்திய கடற்படைத்தளபதி அறிவித்துள்ளார். இவ் நிபந்தனைகளுக்கு அமைய பகலிலும் இரவிலும் மீன் பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடற்படைத்தளபதியினால் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பில் யாழ். அரச அதிபர் க.கணேஸ் தெரிவித்துள்ளதாவது: •கடலுக்குச் செல்லும் இடமும் திரும்பி வரும் இடமும் ஏற்கனவே கடற்படை அல்லது இராணுவத்தினால் தீர்மானிக்கப்பட்ட இடங்களாக உள்ளன. அந்த இடங்களிலிருந்து மாத்திரம் வெளியில் செல்லவோ உள்வரவோ இயலும்;. •மீன்பிடிக்கச் செல்வோர் மாலை 6 மணிக்கு முன்பதாகச் சென்று காலை 6 [...]

தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கே யாழ். செயலகத்தில் பிறப்பு, இறப்புப் பதிவு

யாழ். மாவட்டத்தில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு இறப்புப் பதிவுகள் மட்டும் யாழ். செயலகத்தில் இடம்பெறுகிறது. என்று இறப்புப் பிறப்புப் பதிவாளர் த. பிரபாகரன் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:யாழ். மாவட்டத்தில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் அகதிகள் தஞ்சம் அடைந்திருந்தவேளை அங்கு குழந்தைகள் பிறந்து அவர்கள் மீண்டும் யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறியிருந்தால் அவர்களுடைய பிறப்புப் பதிவுகள் மட்டும் யாழ். செயலகத்தின் இறப்பு, பிறப்பு பதிவினரால் [...]

ஒரே பாடசாலையில் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேல் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்

-கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த ஏற்பாடு- யாழ். மாவட்ட பாடசாலைகளில் தொடர்ந்து ஒரே பாடசாலையில் 6 வருடங்களுக்கும் அதற்கு மேலும் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து வேறு பாடசாலைகளில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. 53 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பி விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். மேற்படி இடமாற்றக் கொள்கையைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கி இருப்பதோடு இது தொடர்பான சுற்றறிக்கைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் இடமாற்றக் கொள்கை [...]

நாளை நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி முக்கியமான திருவிழாக்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று சப்பறத் திருவிழாவும் நாளை தேர்த் திருவிழாவும் நடைபெறவிருக்கின்றன. நாளை நடைபெறவுள்ள இரதோற்சவம் மற்றும் மறுநாள் நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குடாநாடு முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இரவுநேர ஊரடங்கு இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த வருடத் திருவிழா அமைதியான சூழ்நிலையில், [...]

ஏ – 9 வீதியூடாக அம்புலன்ஸ் வண்டிகளில் நோயாளர்களை கொண்டு செல்ல நடவடிக்கை

அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏ – 9 வீதியூடாக அம்புலன்ஸ் வண்டிகளில் கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதியை யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான கோரிக்கைக் கடிதம் யாழ். அரச அதிபர் ஊடாக பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி தேவநேசன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்கைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏ [...]

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing