Archive for January, 2010

டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் ஹர்த்தால் – பின்பு வாபஸ்

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் எவ்வித பதில்களையும் இதுவரை வழங்கவில்லை. இந்தநிலையில் இன்று யாழ்ப்பாணம் வலிகாமத்தில் உள்ள ஒரு அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தளங்கள் இன்று காலை மூடப்பட்டிருந்ததுடன் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன. எனினும் இதனை தடுத்து [...]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! – ஆதரவாளர்கள் அதிருப்தி; முடிபை மாற்றுமாறு வலியுறுத்து

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பேரம் பேசும் பலத்துடன் இருக்க வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத் தேர்தல் முடிபு களை அடுத்துத் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முடிபெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. [...]

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்:மைத்திரிபால சிறிசேன

நாடாளுமன்றத்தை விரைவில் கலைத்து பொதுத் தேர்தl ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நாடாளுமன்ற அமர்வுகள் அனைத்தும் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(Source:வீரகேசரி இணையம்)

ஹோட்டலிலிருந்து சரத் வெளியேற்றம் : இந்தியாவிடம் உதவி கோரவும் முடிவு

ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு சினமன் லேக் வியூ ஹோட்டலிலிருந்து வெளியேறினார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். அவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், தனக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு இந்தியாவிடம் உதவி கேட்க சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவு வெளியான சிறிது நேரத்தில், சரத் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் முற்றுகையிட்டது. இதனால், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா அச்சம் [...]

ஜனாதிபதித் தேர்தல் 2010 யாழ் மாவட்டம், தேர்தல் தொகுதிகளுக்கான வாக்கு முடிவு:

முழுமையான முடிவுகள்(இதுவரை கிடைத்தவை) மகிந்த ராஜபக்ச-43,154   சரத் பொன்சேகா- 113,877  மொத்த வாக்காளர்கள்- 721,359 வாக்களிப்பு வீதம் 24% மட்டுமே தொகுதி மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா சாவகச்சேரி 4,567 11,599 – யாழ்ப்பாணம் 3,296 7,914 – காங்கேசன் துறை 4,559 8,216 – ஊர்காவற்துறை 4,611 3,976 – பருத்தித்துறை 2,361 8,585 – உடுப்பிட்டி 2,545 8,974 – வட்டுக்கோட்டை 4,247 11,712 – கிளிநொச்சி 991 4,717 – கோப்பாய் 4,538 [...]

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே: 1,842,749(18லட்சம்) மேலதிக வாக்குகளால் வெற்றி

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,842,749  மேலதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்ட முடிவுகளின் பிரகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு 6,015,934 வாக்குகளும்(57.88%), எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு 4,173,185 (40.15%)  தற்போதைய நிலைவரங்களின் படி மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். மொத்த வாக்காளர்கள்- 14,088,500 வாக்களிப்பு வீதம்-  70 % மாவட்டம் [...]

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் : யாழில் 15 வீத வாக்கு பதிவாகியுள்ளது

சிறிலங்காவில் ஆறாவது அரசதலைவரை தேர்ந்தெடுக்கும் இன்றைய தேர்தலில் வாக்களிப்பு நிறைவாகும் தறுவாயில் மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 15வீத வாக்களிப்பே இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யாழ்மாவட்டத்தில் சுமார் 7 இலட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் நாட்டில் இல்லை என்பது அந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.மற்றயபடி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காணக்கூடியதாக இருந்தது.  இதேவேளை, நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு 70 -80 வீதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் [...]

யாழில் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் நடைபெறவில்லை என்றும் வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வழங்கப்படவில்லை என்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை அரசு தரப்பு வேண்டுமென்றே மறுத்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அதில் மேலும் கூறியதாவது. யாழ்ப்பாணத்தில் வாக்காளர்கள் இன்று பயணம் செய்து போய் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கு தடையாக கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர் டிப்போக்களிலிருந்து [...]

யாழ்.குடாநாட்டில் 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, யாழ்ப்பாணம் , நவாலி, மானிப்பாய், நல்லூர் மற்றும் கோண்டாவில் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த கைக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் இக் குண்டுச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளன. இலங்கை ஆளுங்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் சர்மா அவர்களின் வீட்டுக்கு முன் இரு குண்டுள் வெடித்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் சார்பில் பேசவல்லவரான டி.எம் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் [...]

யாழில் உண்மையான தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் “உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” என்ற பெயரில் இன்று துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. அப்பிரசுரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் கொலைசெய்தவரும் கொலை செய்யத் தூண்டியவரும் போட்டியிடுவதாகவும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு வழங்குமாறும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவோடு இரவாக குறித்த சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் இனந்தெரியாத சிலர் ஈடுபட்டிருந்தாக யாழ். குடாநாட்டுத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing