Archive for February, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் ‘வடக்கு – கிழக்கு’ என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை [...]

தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவு தாருங்கள்- தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் கூட்டத்தினர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம். ஊடக அறிக்கை 28-02-2010 தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் என்ன நடந்தது? தமிழ் மக்கள் எதிர்கொண்ட பெரும் துயரமும் வலியும் வேதனையும் இன்னமும் ஆறவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் அரசியல் [...]

யாழில் அட்டகாசம் ஆரம்பம்: பிபிசி யாழ் செய்தியாளர் தடுத்துவைப்பு

பி.பி.சி தமிழோசையின் யாழ்.குடாநாட்டிற்கான ஊடகவியலாளரான என். பரமேஸ்வரன் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினரிடம் முறையிட்டுள்ளார். நேற்றுக்காலை யாழ் வேம்படி வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா மக்கள் கட்சி அலுவலகத்தில் தான் பலாத்காரமாக பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்கவின் சிறீலங்கா மக்கள் கட்சியின் அமைப்பாளராக இருப்பவர் மகிந்த திலக் குமார உடுகம. இவர் வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தின் அமைப்பாளராக இருக்கின்றார். அரச தலைவரினதும் அரச தலைவர் [...]

தமிழீழ பிரகடனம் செய்வதற்காகவா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் கோத்தபாயவை சந்தித்தனர்? : இரா.துரைரத்தினம்

அண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலமைகள் பற்றி எனது ஊடகத்துறை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு பற்றி அவர் ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தமிழ் டயஸ்போறாவுடன் (tamil diaspora) பேசி ஏன் ஒரு முடிவுக்கு வருகிறார்கள் இல்லை. மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் தரப்பின் கருத்துக்களை புறம் தள்ளி விட்டு அரசியல் நடத்தலாம் என கருதுகிறார்களா என்ற தொனியில் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது மேற்குலக நாடுகளில் [...]

யாழ்ப்பாணத்தில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. பொருளியல் ஆசிரியர் சின்னத்துரை வரதராஜனை தலைமை வேட்பாளராகக்கொண்டு இந்த வேட்புமனுப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் விபரங்கள். 1.   முதன்மை வேட்பாளர் -சின்னத்துரை வரதராஐன் (பொருளியல் ஆசிரியர்) -யாழ்ப்பாணம். 2.   கலாநிதி.விஐயரட்ணம் ஜோன் மனோகரன் கென்னடி ( முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக [...]

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல்

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,ரி.ஸ்ரீகாந்தா ஆகியோர் அதிலிருந்தும் பிரிந்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற புதிய கட்சியொன்றை கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர். கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.சிவாஜிலிங்கம் தமது கட்சி கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இடது சாரி முன்னணியுடன் இணைந்து குடை சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றது எனத்தெரிவித்தார். வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் தமிழ் [...]

யாழ். நகரில் “மினி இன்போரெல்’ கண்காட்சி வேம்படியில் இன்று முதல் 3 நாள்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் ஒரு முன்னோடி நிகழ்வு

இலங்கையில் நடைபெறும்  “இன்போ ரெல்’ கண்காட்சிக்கு முன்னோடியாக “மினி இன்போரெல்’ (MINI INFOTEL) கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை முதல் நாளை மறுதினம் 28ஆம் திகதி ஞாயிறு வரை மூன்று தினங்கள் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் நடைபெறவுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சம் மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண் காட்சிக்கு இணை ஏற்பாட்டாளராக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவ ராண்மை அமைப்பு செயற்படுகின்றது. பிரதான அனுசரணையாளராக “இன் போரெல் மைக்கிறோ சொவ்ற்’ நிறுவனங் கள் விளங்குகின்றன. [...]

93ஆவது பொன் அணிகள் போர் யாழ். சென். பற்றிக்ஸில் இன்று ஆரம்பம்

‘பொன் அணிகள் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் யாழ். சென். பற் றிக்ஸ் கல்லூரி அணிக்கும் இடையி லான 93 ஆவது வருட கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதா னத்தில் ஆரம்பமாகிறது.இரண்டு நாள் இன்னிங்ஸ் போட் டியான இவ் ஆட்டம் நாளையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கு பி.சிறி குகனும் யாழ். சென். பற்றிக்ஸ் கல் லூரி [...]

டக்ளஸ் வெற்றிலை சின்னத்திலேயே போட்டி:

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ் மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். வட [...]

நேற்று மட்டும் ஒன்பது பேர் கட்டுப்பணம் செலுத்தினர்

பொதுத்தேர்தலில் சுயேட்சையாக போட்டி யிடுவதற்கென நேற்றுமட்டும் 9 பேர் யாழ். தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர். இதில் கதிரவேல் செவ்வேல்-யாழ்ப்பாணம், முருகேசு நடேசலிங்கம்-சுன்னாகம், நாகமுத்து தணிகாசலப்பிள்ளை-யாழ்ப்பாணம், ரட்நாயக்க முதியங்கலாகே மகிந்த திலக்குமார உடுகம-யாழ்ப்பாணம், திருமதி தேவதாஸன் சுலேத்திரா-கரவெட்டி, வல்லி நடராசா மீசாலை-அன்ரனி ரங்கா துசாரா-யாழ்ப்பாணம், ஞானப்பிரகாசம் சிதம்பர நாதன்-தொல்புரம் மேற்கு, முருகன் குமாரவேல்-மானிப்பாய் ஆகியோரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்திய 6 பேருடன் மொத்தமாக 15 பேர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing