பாடசாலை சிறுவர்களை அழைத்துச் செல்வோர் தொடர்பான பூரண விபரங்கள் பாட சாலை அதிபர்களினால் கோரப்படுகின்றன. இதற்கென விசேட படிவம் ஒன்று தயாரிக் கப்பட்டு பெற்றோரைக் கொண்டு பூரணப்படுத்தி பெறப்படுகின்றன. அப்படிவத்தில் பெயர் குறிப்பிட்டோர் மாத்திரமே பாடசாலைச் சிறுவர்களை அழைத்துச் செல்ல முடியும் எனவும் பெயர் குறிப்பி டாத உறவினர்கள் எவரும் அம்மாணவர் களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பெற்றோரின் சம்மதக்கடிதத்துடன் வரவேண்டும் எனவும் அதிபர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்மைக்காலங்களில் யாழ். குடா நாட்டில் பரவலாக இடம் [...]
Archive for April, 2010
பாடசாலைச் சிறுவர்களை அழைத்துச் செல்வோரின் விபரங்கள் அதிபர்களினால் பதியப்படுகின்றன
யாழ்ப்பாணத்தில் முதலிடவுள்ள இந்தியாவின் பாரிய பொறியியல் நிறுவனம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் நிறுவனமான L&T Infrastructure ஆர்வத்துடன் உள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலரிலும் அதிகமான திட்டங்களில் தமது நிறுவனம் முதலிடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக இந்த நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அலுவலர் விசால் மதூர் கூறுகிறார். வீதி அமைத்தல், உயர் கட்டடங்கள், தொடர்மாடி வீடுகள், உல்லாச விடுதிகள், மின்சார உற்பத்தி மற்றும் பொறியியல் திட்டங்களில் தங்களது நிறுவனம் முதலிடுவதற்கும் ஆர்வத்துடன் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ‘யாழ்ப்பாணத்தில் [...]
கொழும்பு ஊடகத்தின் பார்வையில் யாழ்ப்பாணம்
கடந்த சில வருடங்களின் முன்னர் நாட்டினை நிர்வகிப்பதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுத் தருமாறு கோரி தனது பிச்சைப் பாத்திரத்துடன் சிறிலங்கா மேற்கு நாடுகளிடம் கையேந்தி நின்றது. ஆனால் இன்று, நீண்ட பல வருடங்களாகத் தொடர்ந்த போர் முடிவுக்குவர, பலமான அரசாங்கம் ஒன்று ஆட்சியிலிருக்கும் நிலையில் இலங்கைத் தீவில் முதலீடுகளை மேற்கொள்வற்கு முதலீட்டாளர்கள் சிறிலங்காவினைத் துரத்துகிறார்கள். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் sunday observer ஏட்டில் அதன் செய்தியாளர் Shirajiv SIRIMANE யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதிய செய்திக் கட்டுரையில் [...]
யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி! பொது மக்களால் முறியடிப்பு
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மாணவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டனர். அப்போது அம்மாணவி கூக்குரல் இடவே [...]
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படி்ருக்கிறர்.
ஒரு கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட இருவர் யாழில் மீட்பு : சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபா கப்பம் கோரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட இருவர் குருசோ வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மூவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து சற்றுமுன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது. யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் வாகன திருத்துநர் ஒருவரும் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் முறையே 70 லட்சமும் 40 லட்சமும் கப்பமாக கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.குருசோ [...]
தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருகிறது தமிழர் பண்பாட்டுமைய செயலாளர் தெரிவிக்கிறார்
இலங்கையில் தமழர்களின் வரலாறு திட்டமிட்ட வகையில் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் எமது பிரதேசத்தில் உள்ள தொல்லியல் ஆதாரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றது. சுமார் இரண்டாயிரம் வருட வரலாற்றுச் சிறப்பு இலங்கைத் தமிழருக்கு உள்ளது. இது தமிழகத்தின் சேர, பேரி, பாண்டிய நாகரிகத்துடன் தொடர்பு உடையது. இவற்றினை பாதுகாப்பது நமது கடமையாகும். இவ்வாறு நேற்று முந்தினம் இடம்பெற்ற தமழர் பண்பாட்டு மையத்தின் அங்குரார்ப்பன விழாவில் பேசும் பொழுது அதன் செயலர் வைத்திய கலாநிதி எஸ். யமுனாந்தா தெரிவித்தார். [...]
ஒரே பாடசாலையில் 7வருடங்கள் பணிபுரிந்த யாழ். கல்வி வலய 500 ஆசிரியருக்கு அடுத்த மாதம் முதல் இடமாற்றம்
யாழ்.கல்வி வலயத்தைச் சேர்ந்த 500 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தொடர்ச்சி யாக ஒரே பாடசாலையில் 7வருடங்களுக்கு மேல் சேவை புரிந்தவர்களுக்கு யாழ். வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைக ளுக்கு உள்வாரியாக இடமாற்றம் வழங் கப்படும். மே முதலாம் திகதியிலிருந்து இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வரும். தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்கை மற்றும் மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை என்பவற்றுக்கு அமைய குறித்த ஒரு பாடசாலையில் 7வருடங்களுக்கு மேல் கடமை புரிந்த 53 வயதுக்கு உட் பட்ட ஆசிரியர்கள் வேறுபாடசாலைக [...]
பலாலி விமானத் தளபதியாக அத்துல கலுஆராச்சி நியமனம்
பலாலி விமானப் படைத் தலைமையகத் தில் கட்டளைத் தளபதியாக குறூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குறூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேற்படி பதவியை வகித்து வந்தார். இந் நிலையில் அவரின் பதவியுயர்வைய டுத்து இலங்கை விமானப் படையின் 28-வது ரெஜிமென்ட் கட்டளைத் தளபதியாக கடமை யாற்றி வந்த அத்துல கலுஆராச்சி நேற்று முன் தினம் முதல் இப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக முருகேசு சந்திரகுமார் தெரிவு
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் பராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்மொழிந்தார் அதனை நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ சந்திரகுமார் அவர்கள் இம்முறை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

Posted in






