Archive for May, 2010

யாழ்ப்பாணத்தில் புதிய பத்திரிகை ?

ஈபிடிபியின் பொதுச்செயலாளரும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, யாழ்ப்பாணத்தில் புதிய பத்திரிகை ஒன்றை வெளியிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் வெளியாகி வருகின்ற பிரதான மூன்று பத்திரிகைகளும், கடந்த தேர்தல் காலங்கள் உள்ளிட்ட காலப்பகுதியில், ஈபிடிபிக்கு ஆதரவாக செயல்படவில்லை. இந்த நிலையிலேயே அவர் இந்த பத்திரிகையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பத்திரிகைகளின் செய்தியாளர்கள் மற்றும், ஆசிரியர்களையும் தமது பத்திரிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஈ.பி.டி.பி. கட்சி, [...]

பொலிஸ் சேவைக்கு இணைக்கப்பட்டோர் பயிற்சிக்காக களுத்துறைக்கு சென்றனர்

யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் சேவைக் காக தேர்வு செய்யப்பட்ட 266 இளைஞர், யுவதிகள் பயிற்சி வழங்குவதற்காக நேற்று களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ்.மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு நேர்முகப்பரீட்சை மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்,யுவதிகளுக்கு நியமனக் கடிதங்கள் கடந்த 18ஆம் திகதி வழங்கப்பட்டது. இவ்வாறு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 247 இளைஞர்களும் பெண் கான்ஸ்டபிள்களுக்கு தேர்வானவர்களில் 15 யுவதிகளும் நேற்று பயிற்சி வழங்குவதற்காக களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு அழைத்துச் [...]

இரணைமடு நீர் விநியோகத்தை காவேரிப் பிரச்சினைபோல் ஆக்கிவிடாதீர்கள்

-Valampurii Editorial 30-05-2010- இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீர் விநியோகிக்கும் திட்டம் விரைவில் அமுல் படுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி யிருந்தவேளை ,யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வும் அதனை உறுதிப்படுத்தி உரையாற்றினார். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் செய்யுங்கள் என்று யாழ்ப்பாண மக்கள் மகஜர்கள் எழுதி அரசுக்கு அனுப்பியவர்கள் அல்ல.இந்த நாட்டில் எந்தத் திட்டமும் சரிவராது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.அபிவிருத்திப் பணி ஒன்றை எதிர்ப்பதென்றால், அதற்குச் சங்கம் அமைத்துப் போராடவும் நாங்கள் தயங்கமாட்டோம் [...]

திருத்தம் முடிந்ததும் ADSL நிலமை வழமைக்கு திரும்பிவிடும்

இந்தியப்பகுதியில் இருந்தான கடலுக்கடியிலான சர்வதேச நாரிழைக்கேபிள் தொடர்புகளில் செய்யப்படும் திருத்தம்காரணமாக சிறீலங்கா ரெலிக்கொம்மினது ADSL இணைப்பில் வேகம் மிக மிக குறைவாகக்காணப்படுகிறது இத்திருத்தவேலைகள் வருகின்ற மே 28ம்திகதி யளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. கம்பில்லாத்தொடர்புகளின் ஊடான சேவைகளில் இது பெரியளவில் பாதிப்பை ஏற்படத்தாது திருத்தம் முடிந்ததும் ADSL நிலமை வழமைக்கு திரும்பிவிடும் இத்தகவல்களை சிறீலங்கா ரெலிக்கொம்மின் யாழ் பிராந்திய நிலையத்தினர் தெரியப்படுத்தினர்

யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் கைது- மாநகரசபையில் அடையாள வேலைநிறுத்தம்

சாவகச்சேரி நீதிவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்து நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட் டிருந்த யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் றீகன் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள் ளார்.இதேவேளை இக்கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுதலைசெய்யக்கோரி மாநகரசபை அடையாள பணிப்புறக்கணிப்பு அறிவித்துள்ளது

நல்லூர் நட்சத்திர விடுதி நிர்மாணம் – இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை

யாழ்.நல்லூர் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஐந்து நட்சத்திர சுற்றுலா விடுதிக்கான கட்டட நிர்மாணப் பணிகள் குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்டது என முதலில் வெளிவந்த செய்தி தவறானது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். செய்தித் திருத்தத்தின்படி, கச்சேரி – நல்லூர் வீதியில் மேர்க்கன்டைல் வங்கி 80 அறைகளைக் கொண்;ட இந்த நட்சத்திர விடுதியை அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்தது. இந்த விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகிய நிலையில் யாழ்ப்பாணத்தில் [...]

மானிப்பாயில் மாணவி ஒருவரைக் காணவில்லை படையினர் இரவிரவாக தேடுதல்

யாழ்ப்பாணம், மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள விவேகானந்தா வித்தியாசாலை மாணவியான பதினொரு வயதுச் சிறுமியை நேற்று நண்பகலுக்குப் பின்னர் காணவில்லை என்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய், சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த நகுலேஸ்வரம் ரேணுகா (வயது 11) என்ற மாணவியே காணாமல் போனவராவார். இதுபற்றி கூறப்படுவதாவது: நேற்றுக்காலை பாடசாலைக்குச் சென்ற பிரஸ்தாப மாணவி, பாடசாலை நேரம் முடிந்தும் வீடு திரும்பாதததை அடுத்து தாயார் தேடிச் சென்றதாகவும் அவரைக் காணததையடுத்து பொலிஸில் முறைப்பாடு [...]

எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம்-பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன்

இலங்கை நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் கன்னிப் பேச்சு இன்று பாராளுமன்றத்தை அதிரவைத்தது. கெளரவ சபாநாயகர் அவர்களே! மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே! என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து [...]

யாழ். தமிழ் சிறை அதிகாரிகளால் தமிழ் அரசியல் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் சிறை அதிகாரிகளினால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுரமான முறையில் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை நேரடியாக கண்ட பொதுமகன் ஒருவர் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தமையை அடுத்து நீதிபதி இ.த.விக்னராஜா நேற்று இந்த விடயம் தொடர்பாக விளக்கத்தை கோரினார். இதனையடுத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது நேற்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. [...]

‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’: தமிழ் பாடசாலைகள் துரத்திய தமிழ் மாணவர்களுக்கு இடமளித்தது சிங்களப் பாடசாலை

வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் ‘வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்’ எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன். புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ‘நேசக்கரங்கள்’ உதவி நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் நடாத்திய உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அதிபர் ரங்கநாதன். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, சமாதான காலத்தில் செழிப்புற்றிருந்த வன்னி மாணவர்களின் கல்வி 2006ம் ஆண்டில் போர் [...]

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing