Archive for July, 2010

தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை

யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளையில், நீதிபதி ஆர். வசந்தசேனன் இந்த வழக்கு விசாரணையை நாளைவரை ஒத்திவைத்தார். அத்துடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர், சட்டவைத்திய அதிகாரி மற்றும் பணியாளர்களையும் நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, புதைக்கப்பட்ட குடும்பநல அதிகாரி, தர்ஷிகாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக வைத்திய சோதனைகளுக்காக நேற்று [...]

யாழ்.அபிவிருத்திப் பணி ஒப்பந்தங்கள் திட்டமிட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படுகிறது

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கட்டிடத்தொழில் உட்பட்ட, தேர்ச்சி பெற்ற தொழில்சார் பணியாளர்கள் இருக்கின்ற போதும், தென்னிலங்கை சிங்களவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளமை, யாழ்ப்பாண மக்கள் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவரும், இலங்கை [...]

கந்தர்மடத்தில் மோ.சைக்கிள் விபத்து பல்கலைக்கழக மாணவர் இருவர் பலி – நேற்று முன்தினம் இரவு பயங்கரம்

கந்தர்மடம் பழம் வீதிச் சந்தியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி யளவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரிதாபகரமாகப் பலியானார்கள். இவ் விபத்தில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூன் றாம் வருட பொறியியல் பீட மாணவன் யோகராஜா கலிஸ்ரன் கஜேந் திரன் (வயது-24), பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தியைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை இறுதி வருட மாணவன் சாந்தகுமார் சந்துரு (வயது-24) ஆகிய இரு மாணவர்களுமே பலி யானவர்கள் ஆவர். நேற்று [...]

விஜயகலா மகேஸ்வரன் அரசுடன் இணையவுள்ளாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முன்முயற்சி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவினால் எடுக்கப்பட்டதாகவும் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக யாழ் செல்லும் அரசாங்க அமைச்சர்கள் விஜயகலா மகேஸ்வரனைச் சந்திப்பதை வழமையாக்கிக் கொண்டுள்ளதாகவும் தமது உத்தியோகபூர்வ விஜயங்களில் விஜயகலா மகேஸ்வரனையும் இணைத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த முயன்று [...]

பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ். வருகை

இலங்கை முதலீட்டு சபையும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வட பகுதியில் மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி திட்டங்களில் பங்கேற்பதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள பிரான்டெக்ஸ் மாஸ் ஹோல்டிங், டிமெக்ஸ் கார்மன்ட்ஸ், ஒமேகா லைன் ஒரிக் அப்பிரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமுகமாக வருகை தந்தவர்களாவர். இலங்கை முதலீட்டுச் சபையின் [...]

எரிபொருள்களின் விலை யாழ்ப்பாணத்தில் குறைப்பு

யாழ்.மாவட்டத்தில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலை கள் லீற்றர் ஒன்றுக்கு 3 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெற்றோல் ஒரு லீற்றர் 115 ரூபாயாகவும் டீசல் ரூபாய் 73.50 ஆகவும் மண்ணெண்ணெய் 51 ரூபாயாக வும் விற்பனை செய்யப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவப் பாதுகாப்புடன் டாக்டர் பிரியந்த வைத்தியசாலையில்

விசாரணையின் போது தாக்கப்பட்டதாகத் தெரிவித்து டாக்டர் பிரியந்த செனவிரட்ன நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலை யின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பநல உத்தியோகத்தர் ச.தர்சிகாவின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டாக்டர் பிரியந்த செனவிரட்ன நேற்று ஊர்காவற்றுறை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந் நிலையில் விசாரணையின் போது தான் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து நேற்றிரவு 7.30 மணியளவில் யாழ்.போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் [...]

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் பதவியேற்பு: கணேஸ் ஓய்வு

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இன்று இமெல்டா சுகுமார் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண செயலகத்தில் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.   ஏற்கனவே இந்த பதவி ஏற்பு கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், அது பின்னர் பிற்போடப்பட்டது.இந்தநிலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக கே கணேஸ் இன்று வரை கடமையாற்றி வந்தார்.இதேவேளை கிளிநொச்சியின் முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக [...]

கஷ்டத்தை அனுபவித்த வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்: கிளிநொச்சியில் ஜனாதிபதி

நெருக்கடிகள், கஷ்டங்களுக்கு முகம் கொடுத்தவர்கள் என்ற வகையில் பிரச்சினைகளுடன் வரும் வடபகுதி மக்களுக்கு முடிந்த வரை திருப்தியான தீர்வை வழங்கி அவர்களது முகத்தில் சந்தோஷத்தை வரவழைக்கும் சக்தியும் அதிகாரமும் அரச ஊழியர்களின் கைகளிலேயே இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற கிளிநொச்சி அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், அரசியல் பேதங்களைப் புறந்தள்ளி மக்களின் கண்ணீரைத் துடைக்க [...]

யாழ்ப்பாணப் பெண்மணி ஒருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் போட்டி

அவுஸ்திரேலிய செனற் சபைத் தேர்தலில் கிறீன் கட்சியின் வேட்பாளராக, அங்கு புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார். பிராமி ஜெகன் (வயது 30) என்கிற முன்னாள் ஊடகவியலாளருக்கே இச்சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இவர் சிறுமியாக இருக்கும் போதே உள்நாட்டு யுத்தம் காரணமாக குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறி சோமாலியா, தன்சானியா, மலேசியா போன்ற நாடுகளில் தங்கியிருந்து பின் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தார். கிறீன் கட்சியின் செனற் வேட்பாளராக நியமிக்கப்பட்டது குறித்துக் கருத்துக் கூறிய அவர், தமிழ் சமூகத்துக்கு [...]

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing