-வலம்புரி-
காரைநகரில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் நடைபெற்றதாக பரவிய செய்தியை அடுத்து பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
காரைநகர் மேற்கு வீதியில் வேம்படிப் பகுதியில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கடத்தும் முயற்சி நடைபெற்றதாகவும் சிறுவர்கள் கூக் குரலிட்டதனால் அம்முயற்சிகள் தோல்விடைந்ததாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை சம்பவம் தொடர்பாக எவரும் கிராமசேவையாளரிடமோ அல்லது வேறு எவரிடமோ முறையிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் மேற்படி சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறியாத நிலையிலும் அச்சமடைந்த பெற்றோர்கள் பாடசாலைக்கு சிறுவர்களை தாமே கூட்டி வந்து மீளவும் அழைத்துச் செல்கின்றதாகவும் தெரியவந்துள்ளது.

Posted in 





