-வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 07 பெப் 2010 -
சிங்களக் கதைகளில் மாதனமுத்தாவின் கதை பிரபலமானது. அந்தக் கதைக்குள் இருக் கக் கூடிய மூடத்தனமும், நகைச் சுவையும் சிங்கள மக்கள் என்ற எல்லைத் தாண்டி தமிழ் மக்களையும் வந்தடைந்தது.இதில் பானை பக்குவம் என்ற கதை தமிழ் மொழிப் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதும் உண்டு.
இத்தகைய கதைகள் நகைச்சுவைக்கானவை மட்டுமல்ல, அறிவின்மையைக் கூறி அறிவைக் காட்டும் உடன்பாட்டு எதிர்மறை தன்மையைக் கொண்டவையும் ஆகும்.எதுவாயினும் தென்பகுதியில் ‘பானை பக் குவம்’ என்ற கதை அறியாமையை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், வடக்கில் ‘காணி பக்குவம்’ என்று இங்கு சொல்லப்படும் கதை மக்களை விழிப்பூட்டும் கதையாகும்.
ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர் தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். காரணகாரியமின்றி யாழ்ப்பாணம் நோக்கி வரும் தென்பகுதி மக்களோடு அங்குள்ள நிறுவனங்களும், வங்கிகளும், கம்பனிகளும் தாராளமாக வந்து சேர்ந்துள்ளன.இவை அனைத்தினதும் வருகையில் யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரம் தொடர்புபட்டுள்ளது என்ற உண்மை மறப்பதற்குரியதல்ல.
எனினும் இது தொடர்பான விளக்கம், விழிப்புணர்வு பற்றி யாழ்ப்பாணத்தின் புத்திஜீவிகள் புரிந்து கொண்டிருந்தாலும் ‘மெளனம் கலக நாஸ்தி’ என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பதை உத்தம விரதமாக அவர்கள் கொண்டுள்ளனர். இதன் விளைவு எதிர்காலத்தில் பெரும் கலகத்திற்கு அத்திபாரமாக அமையும் என்பதால், யாழ்ப்பாணப் புத்திஜீவிகள் தங்கள் மெளன விரதம் கலைத்து உள்ளதை உள்ளவாறு எடுத் துரைக்க வேண்டும்.
குறிப்பாக தென்பகுதி அமைப்புகள் யாழ்ப்பா ணத்தில் நிலம் வேண்டும் பணியில் தீவிரமாக இருக்கும் போது நம்மவர்களும் ஐந்து பத்து அதிகம் என்பதற்காக காணிகளை கையளித் தால் நிலைமை என்னவாகும்?
ஆக, யாழ்ப்பாணத்தின் தேசவழமைபற்றி நம் மக்கள் அறிய வேண்டும்.அங்கு பானை பக்குவம் என்ற கதை வெறுங் கதை. ஆனால் இங்கு காணி பக்குவம் என்ற கதை கட்டாயம் சிந்திக்க வேண்டிய கதை

Posted in 





