வகுப்பறை கட்டிட தொகுதிகளை ஆளுநர் திறந்து வைப்பார்

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் யாழ். மாவட்டத்தில் 16 பாடசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடங் களை வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜி.ஏ.சந்திரசிறி 15, 16ஆம் திகதிகளில் திறந்து வைக்கவுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடை பெறும் நிகழ்வுகளில் நாளை மறுதினம் திங் கட்கிழமை வண்ணார்பண்ணை சிறி வைத்திலிங்கம் வித்தியாலய கணனி ஆய்வு கூடம்மற்றும்

மானிப்பாய் மகளிர் கல்லூரி, சுதுமலை சிந்மய பாரதிவித்தியாலயம், யாழ். வைத் தீஸ்வரா கல்லூரி, திருநெல்வேலி, இந்துத் தமிழ் கலவன் பாடசாலை, திரு நெல்வேலி முத்துத்தம்பிவித்தியாலயம்ஆகிய வற்றின்வகுப்பறைக் கட்டிடத் தொகுதிகளும்திறந்து வைக்கப்படவுள்ளன.

மறுநாள்16 ஆம்திகதிசெவ்வாய்க்கிழமை யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயம், மட்டுவில் ஸ்கந்தவரோதயா வித்தியாலயம், யாழ். ஸ்ரீ நாரதாவித்தியாலயம், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி,

தேவராளி இந்துக்கல்லூரி, கொற்றாவத்தை ஏ.எம்.ரி.எம். பாடசாலை,வல்வெட்டித்துறை விநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டிடங்களும் வடமராட்சி வலயக் கல்வி அலுவலக கட்டிடமும் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்படவுள்ளது

Responses are currently closed, but you can trackback from your own site.

Comments are closed.

Powered by WordPress | Free cell phones brand new for sale. | Thanks to Best at&t deals, Facebook Games and Conveyancing