டக்ளஸ் வென்றாலும் பரவாயில்லை, கூட்டமைப்பு வெல்லக்கூடாது என்கின்றது கஜேந்திரன் ஆதரவுக் குழு
Posted by thava on March 14th, 2010
| தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்ற கஜேந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையில் யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. |
| நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கல்வியங்காட்டுப் பகுதிக்கு வெள்ளை வான் ஒன்றில் சென்ற கஜேந்திரன் ஆதரவாளர்கள் அங்கு மதில்களில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளம்பரச் சுவரொட்டிகளின் மீது தாம் கொண்டு சென்ற சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் இது தொடர்பில் ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த குறிப்பிட்ட நபர்கள், ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வென்றாலும் பரவாய் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறக் கூடாது என்பதில் தாமும் தமது தலைமையும் தெளிவாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து அங்கு மக்கள் திரளவே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சம்பவத்தை பார்வையிட்ட முதியவர் ஒருவர் தமிழ் தேசியத்தை மாசுபடுத்த சில சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் வெற்றி அடைந்து வருவதாக தாம் கருதுவதாக கவலை வெளியிட்டார். |
Responses are currently closed, but you can
trackback from your own site.