| யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. |
| இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளையில், நீதிபதி ஆர். வசந்தசேனன் இந்த வழக்கு விசாரணையை நாளைவரை ஒத்திவைத்தார்.
அத்துடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர், சட்டவைத்திய அதிகாரி மற்றும் பணியாளர்களையும் நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, புதைக்கப்பட்ட குடும்பநல அதிகாரி, தர்ஷிகாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக வைத்திய சோதனைகளுக்காக நேற்று கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது |
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
Posted by thava on July 29th, 2010

Posted in 





